பொட்டல்புதூரில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்


பொட்டல்புதூரில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2023 2:46 AM IST (Updated: 13 Aug 2023 4:36 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து பொட்டல்புதூரில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி

கடையம்:

மணிப்பூர், ஹரியானா மாநிலங்களில் வன்முறையை தடுக்க தவறிய மற்றும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர துடிக்கும் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து, பொட்டல்புதூரில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஹயாத் அன்சர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அப்பாஸ், மாவட்ட செயலாளர் நாகூரப்பா, மாவட்ட தலைவர் சித்திக், மாவட்ட துணைத்தலைவர் ஆதாம் ஹனிபா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் ஜாகீர் கண்டன உரையாற்றினார்.

1 More update

Next Story