பட்டுக்கோட்டை- மண்ணுக்குமுண்டான் அரசு பஸ்சை தேவதானம் வரை நீட்டிக்க வேண்டும்


பட்டுக்கோட்டை- மண்ணுக்குமுண்டான் அரசு பஸ்சை தேவதானம் வரை நீட்டிக்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Sep 2023 7:30 PM GMT (Updated: 3 Sep 2023 7:30 PM GMT)

பட்டுக்கோட்டை- மண்ணுக்குமுண்டான் அரசு பஸ்சை தேவதானம் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

பட்டுக்கோட்டை- மண்ணுக்குமுண்டான் அரசு பஸ்சை தேவதானம் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரம்பசுகாதார நிலையம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தேவதானம், ஒட்டங்காடு, புத்தன்கோட்டகம், காரைக்காரன்வெளி, மாரநகரி ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பல்வேறு தேவைகளுக்காக பெருகவாழ்ந்தானுக்கு செல்ல வேண்டி உள்ளது. ெபருகவாழ்ந்தானில் போலீஸ் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம், மேல் நிலைப்பள்ளி, வங்கிகள் இயங்கி வருகின்றன. கிராம மக்கள் பெருகவாழ்ந்தானுக்கு செல்ல 10 கி.மீ. வரை பயணிக்க வேண்டி உள்ளது.

பஸ் வசதி இல்லை

கிராமங்களில் இருந்து முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெருகவாழ்ந்தானுக்கு வந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் தேவதானம் பகுதியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்ல பஸ் வசதி இல்லை.

இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே பட்டுக்கோட்டையில் இருந்து மதுக்கூர், பெருகவாழ்ந்தான் வழியாக மண்ணுக்குமுண்டான் வரை அரசு பஸ் தினசரி 3 முறை வந்து செல்கின்றன. இந்த அரசு பஸ்சை தேவதானம் கடைவீதி வரை நீட்டிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story