நிழற்குடையை இடித்தவருக்கு ஒரு ஆண்டு சிறை


நிழற்குடையை இடித்தவருக்கு ஒரு ஆண்டு சிறை
x

கிணத்துக்கடவு அருகே நிழற்குடையை இடித்தவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த வரதனூர் ஊராட்சி செங்குட்டை பாளையம் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரமூர்த்தி (வயது 57). இவருடைய வீட்டின் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது.

அதை அவர், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி கடப்பாரையால் இடித்து சேதப்படுத்தினார். இதை தட்டிக்கேட்ட ஊராட்சி செய லாளர் ஜெயக்குமாருக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரமூர்த்தியை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சந்திரமூர்த்திக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார்.

அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் உத்தரவிடப்பட்டது.


Next Story