பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
கன்னியாகுமரி,
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு முன்பு இது குறித்த புகார்கள் வந்த போது, துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகள் தொடர்பாக புகார்கள் வரும் பட்சத்தில், அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story