பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்


பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கபசுர குடிநீர்

கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழைப்பொழிவு குறைந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது சீதோஷ்ண நிலை மாறி வருவதால் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கபசுர குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ராமகிருஷ்ணா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று மாணவ-மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி, மருந்தாளுனர் காமராஜ், பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

முகக்கவசம் அணிய வேண்டும்

குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும் ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு இருந்தால் மற்றவர்களுக்கும் பரவுகிறது. இதன் மூலமாகவும் பாதிப்பு அதிகமாகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். ஏதாவது தொந்தரவுகள் இருந்தால், பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

நகராட்சி பள்ளிகளில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தொடர்ந்து 3 நாட்களுக்கு வழங்கப்படும். இன்று (நேற்று) ராமகிருஷ்ணா நகர் பள்ளியில் 850 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து அனைத்து நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story