கார்-அரசு பஸ் மோதலில் ஒருவர் பலி


கார்-அரசு பஸ் மோதலில் ஒருவர் பலி
x

One killed in car-government bus collision

திருவண்ணாமலை

போளூர்

கார்-அரசு பஸ் மோதலில் ஒருவர் பலி பலியானார்.

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை அடுத்த ஷாலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி 6 பேர் காரில் வந்து கொண்டிருந்தனர். போளூர் பை-பாஸ் ரெயில்வே மேம்பாலம் அருகே அதிகாலை 3.30 மணி அளவில் வந்தபோது பெங்களூருவிலிருந்து ஆரணி நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பஸ்சும் காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் பண்ணாம சீனு (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் காரில் வந்த தனஞ்செழியா (29), ராமகிருஷ்ணா (41), ஷியாம் (38), ராஜேஷ் (42), சங்கர் (40) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அரசு பஸ் டிரைவர் பூபாலன் போளூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் (பொறுப்பு), சப் -இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story