அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் கட்டிடம் கட்டும் பணி


அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் கட்டிடம் கட்டும் பணி
x

Construction work at Govt Girls High School

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் போதிய வசதி இல்லாததால் அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் தொகுதி நிதியில் இருந்து ரூ.17½ லட்சம் மற்றும் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.17½ லட்சம் என இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இந்த நிலையில் கட்டிடம் கட்டும் பணியை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகர செயலாளர் கோபி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து பணிகளை விரைந்து முடித்து மாணவிகளின் பயண்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்கள்.

அப்போது தி.மு.க. நிர்வாகிகள் திருமால், நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story