திருப்பூண்டியில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
In Tirupundi, BJP protested
வேளாங்கண்ணி:
ஆவின் பால் விலை உயர்வு மின்சார கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வை கணடித்து கீழையூர் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் திருப்பூண்டி கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. ஒன்றிய தலைவர் இளமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் பாலாஜி வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் பாலச்சந்தர், மாவட்ட துணைதலைவர் ஆறுமுகம், மாவட்ட வர்த்தகப்பிரிவு தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் அணி மாவட்ட தலைவர் உமாபதி மற்றும் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் லிங்கம் ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட செயலாளர் சுமதி முருகையன், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் புவனேஸ்வர்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொதுச்செயலாளர் மதியழகன் நன்றி கூறினார். பின்னர் மாற்றுச்கட்சியில் இருந்து 30 பேர் விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர்.