காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்


காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Nov 2022 1:46 AM IST (Updated: 16 Nov 2022 2:25 AM IST)
t-max-icont-min-icon

காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

விருதுநகர்

சாத்தூர்,

காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சாத்தூரில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சாத்தூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வெம்பக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன், உதவி வேளாண்மை இயக்குனர் ஜோதிபாசு, மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிவாரணம்

கூட்டத்தில் ரெங்கப்பநாயக்கன்பட்டி, ஜக்கம்மாள்புரம், ஒத்தையால், ஓ.மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள நிலையில் காட்டுப்பன்றிகளால் அதிக அளவில் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதில் சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஏழாயிரம்பண்ணை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story