நாமக்கல்லில் மாயமான டாக்டர் கன்னியாகுமரியில் மீட்பு


நாமக்கல்லில் மாயமான டாக்டர் கன்னியாகுமரியில் மீட்பு
x

Rescue in Kanyakumari Mysterious Doctor in Namakkal

கன்னியாகுமரி

நாமக்கல் மாவட்டம் கே.கே.நகர் மோகனூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மகன் சக்திவேல் (வயது27). எம்.பி.பி.எஸ். டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் கடந்த 11-ந் தேதி மாலையில் வீட்டில் இருந்து அருகில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் சக்திவேலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவு சக்திவேல் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். இங்குள்ள ஒரு விடுதியில் தங்குவதற்காக அறை கேட்டார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த ஒரு ஆண்டாக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். பின்னர் சக்திவேலை போலீசார் தந்தை வெற்றிவேலிடம் ஒப்படைத்தனர்.


Next Story