எம்மேகவுண்டன்பாளையத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது
எம்மேகவுண்டன்பாளையத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நெகமம்
எம்மேகவுண்டன்பாளையத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தேங்காய் உறிக்கும் தொழிலாளி
திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 26). இவர் கோவை மாவட்டம் நெகமம் அடுத்த எம்மேகவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு தேங்காய் களத்தில் தங்கி தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்தநிலையில் அவர் தங்கியிருந்த வீட்டின் பின்புறத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார்.
கஞ்சா செடி வளர்ந்து முற்றிய நிலையில் கஞ்சா மனம் வீசியுள்ளது. அதனால் இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
1½ கிலோ கஞ்சா செடி
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வடிவேல் வசித்து வந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வீட்டில் வளர்த்த 1½ கிலோ கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.