குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணி


குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணி
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணி

கோயம்புத்தூர்

வால்பாறை

தமிழக சுகாதாரத்துறை உத்தரவின்பேரில் கண் பார்வையை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம் வால்பாறை பகுதியில் நேற்று முதல் வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர்(பொறுப்பு) டாக்டர் ஆனந்தன் தலைமையில் வால்பாறை, முடீஸ், சோலையாறு நகர் ஆகிய 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் கிராம சுகாதார செவிலியர்கள் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ சொட்டு மருந்து கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார பணியாளர்கள் கூறுகையில், இந்த சிறப்பு முகாமில் வால்பாறை பகுதியில் நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருந்து தங்கள் பகுதிக்கு வரக்கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கிராம சுகாதார செவிலியர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ சொட்டு மருந்து கொடுக்க உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

1 More update

Next Story