ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு:
அனுமன் ஜெயந்தி
திருவெண்காடு அருகே உள்ள மங்கைமடம் அபய ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.
இதையடுத்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமஞ்சனம்
இதேபோல் செம்பனார்கோவில் அருகே உள்ள மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மலர் மற்றும் வடமாலை அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பழையகரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், பூம்புகார் ராஜநாராயண பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், கிடாரம் கொண்டான் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தன.