காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆற்காடு பஸ் நிலையம் அருகே காங்கிரஸ்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். ஆற்காடு நகர தலைவர் பியாரேஜான் நிர்வாகிகள் வீரப்பா, ஜெகதீஷ், அப்துல் சுக்கூர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் கலந்து கொண்டு கவர்னரை கண்டித்து உரையாற்றினார். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் கேசவன், விநாயகம், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story