காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-12T00:16:40+05:30)

ரெயில்வே துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி சுபாஷ்நகர் அருகே உள்ள ெரயில்வே மேம்பாலம் இரட்டை வழிப் பாதைக்காக கடந்த 2019-ம் ஆண்டு முழுமையாக இடிக்கப்பட்டு பணி நடைபெற்றது. ஆனால் பணி தொடர்ந்து நடைபெறாமல் கடந்த 1½ ஆண்டுகளாக பாதியிலேயே நிற்கிறது. இதனால் அந்த வழியே செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்தநிலையில் கிடப்பில் போடப்பட்ட சுபாஷ்நகர் பாலப்பணியை மீண்டும் ெதாடங்கி விரைந்து முடித்திடக் கோரி தோவாளை கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். பேரூர் காங்கிரஸ் தலைவர் அஸ்வின் ஆமோஸ், வட்டார செயல் தலைவர் ஷிஜில் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பிரின்ஸ் எம்.எல்.ஏ., குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் அந்தோணிமுத்து, தாழக்குடி பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.என்.ராஜா, வட்டார பொருளாளர் செல்வா, செண்பகராமன்புதூர் காங்கிரஸ் தலைவர் நீலாமணி, மாவட்ட அமைப்பு செயலாளர்கள் சுபுக்கான், சுதாகர், மாவட்ட செயல் தலைவர் சகாயராஜ், தோவாளை காங்கிரஸ் தலைவர் கனகப்பன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பாலப்பணியை கிடப்பில் போட்ட ெரயில்வே துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story