முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
நெமிலியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெமிலி மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் கீழ்வீதி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு நெமிலி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி கலந்து கொண்டு 70 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வேட்டி சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
அப்போது தமிழகத்தில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. கிராமப்புற பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய இலவச பஸ் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களின் மூலம் இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார் என்றார்.
Related Tags :
Next Story