தாளவாடி அருகே தொட்டம்தாய் அம்மன் கோவிலில் குண்டம் விழா


தாளவாடி அருகே தொட்டம்தாய் அம்மன் கோவிலில் குண்டம் விழா
x

தாளவாடி அருகே தொட்டம்தாய் அம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அடுத்துள்ள நெய்தாளபுரத்தில் பழமையான தொட்டம்தாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க சாமியின் ஆபரணங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அதன்பின்னர் சிறப்பு அபிஷேகம் நடத்தி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, உற்சவர் அம்மன் கோவில் குளக்கரைக்கு அழைத்து வரப்பட்டது.

இதையடுத்து நேற்று அதிகாலை அம்மன் குளக்கரையில் இருந்து கோவில் நோக்கி புறப்பட்டது. கோவிலை சாமி வந்தடைந்ததும் பூசாரி சிக்குமாதய்யா குண்டத்துக்கு மலர் தூவி பூஜை செய்தார். பின்னர் ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்ப குண்டம் இறங்கினார். பூசாரியை தவிர மற்ற யாரும் இந்த கோவிலில் குண்டம் இறங்க கூடாது என்பது ஐதீகம் அதனால் மற்ற பக்தர்கள் குண்டத்தை தொட்டு வணங்கினார்கள்.


Related Tags :
Next Story