மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர், சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர், சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கமிஷனர் அலுவலகம்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன் (கிழக்கு), அனிதா (தலைமையிடம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் மொத்தம் 39 மனுக்கள் பெறப்பட்டன.
சூப்பிரண்டு அலுவலகம்
அதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
தொடர்ந்து அந்த மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் 32 மனுக்கள் பெறப்பட்டன.