பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா


பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே கொட்டா மேடு கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு துணை தலைவர் தனம்சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் மஞ்சுளா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழத்தாழனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். இதில் ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார் கலந்து கொண்டு பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் உதயா, ஒன்றியக்குழு உறுப்பினர் குமாரிநாராயணசாமி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் அன்புமதி, மாவட்ட பிரதிநிதி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story