வால்பாறையில் கோடை மழை


வால்பாறையில் கோடை மழை
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கோடை மழை

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் இருந்து தான் கோடை மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கடந்த மாதம் 13-ந் தேதி முதல் இந்த மாதம் முதல் வாரம் வரை கனமழை பெய்தது. கடந்த 10 நாட்களாக வால்பாறை பகுதியில் மழை பெய்யவில்லை. மாறாக கடுமையான வெயில் வாட்டி வந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி முதல் 4 மணி வரை லேசான மழை பெய்தது. இந்த மழை காரணமாக வால்பாறை பகுதி முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இது பொதுமக்களையும், விவசாயிகளையும், சுற்றுலா பயணிகளையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

1 More update

Next Story