ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம்


ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம்
x

தர்மபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம் செந்தில்குமார் எம்.பி. தலைமையில் நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குழுவின் தலைவர் டாக்டர் செந்தில்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளில் முன்னேற்றம் குறித்து விளக்கி கூறினர். தொடர்ந்து அந்த பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் செந்தில்குமார் எம்.பி. பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகளின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய அரசின் திட்டங்களை அரசுத்துறை அலுவலர்கள் விரைந்து நிறைவேற்றிட வேண்டும். ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் அதற்கான தீர்வையும் கண்டறிந்து விரைவாக நிறைவேற்ற ஏதுவாக இருக்கும். எனவே துறை அலுவலர்கள் அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு, மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story