மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஊட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஊட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நீலகிரி
ஊட்டி
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் பாசறை செயலாளர் சந்திரலேகா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பொன்.மோகன் தாஸ், கேதீஸ்வரன், டேனி, வேலாயுதம் உட்பட மகளிர் பாசறை பெண்கள், நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் அம்ரித்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். மதுவினால் தமிழ்நாட்டில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் நிதி நிலைமையின்மை, சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது. மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






