முயல் வேட்டையாடியவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
முயல் வேட்டையாடியவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கை
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நவதாவு, சீகங்குளம், சித்தலகுண்டு, பட்டத்தரசி மற்றும் சிவகங்கை அருகே மதகுபட்டி, வேளாணி பகுதிகளில் முயல் வேட்டை நடைபெறுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் பிரபா உத்தரவின் பேரில் சிவகங்கை வனச்சரக அலுவலர் பார்த்திபன் தலைமையில் வனவர் பிரவீன் பாரதி, வனவர் பிரவீன் ராஜ், வன காவலர் தங்கச்சாமி, விருதுநகர் வன பாதுகாப்பு படை அதிகாரிகள் வனவர் செந்தில் ராகவன், வனக்காப்பாளர் பாலமுருகன், மதன், வன காவலர் லிங்குசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முயல்களை வேட்டையாடியவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story