கிணத்துக்கடவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-செ.தாமோதரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்


கிணத்துக்கடவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-செ.தாமோதரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்
x
தினத்தந்தி 30 Sept 2023 12:30 AM IST (Updated: 30 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-செ.தாமோதரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் அருகில் சமுதாய நலக்கூடத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நாகராணி கனகராஜ், மாவட்ட கவுன்சிலர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சகுந்தலா வரவேற்று பேசினார். விிழாவில் கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. செ.தாமோதரன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இதில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 100 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களும் ,5 வகை சாப்பாடும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு என்கிற பிரபு, அரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ் , பேரூராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன், கிணத்துக்கடவு பேரூராட்சி அ.தி.மு.க செயலாளர் கே.என்.மூர்த்தி, துணை செயலாளர் பிரபு மற்றும் மேற்பார்வையாளர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






Next Story