தீக்குளித்த 2 குழந்தைகளின் தாய் சாவு


தீக்குளித்த 2 குழந்தைகளின் தாய் சாவு
x

பரங்கிப்பேட்டை அருகே தீக்குளித்த 2 குழந்தைகளின் தாய் பலியானாா்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியகுமட்டிகிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி பானுப்பிரியா(வயது 32). சற்று மன நலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது திடீரென கேனில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பானுப்பிரியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story