பொள்ளாச்சி ரவுண்டானாவில் காந்தி சிலை மீண்டும் அமைப்பு-வருகிற 2-ந்தேதி திறக்க முடிவு


பொள்ளாச்சி ரவுண்டானாவில் காந்தி சிலை மீண்டும் அமைப்பு-வருகிற 2-ந்தேதி திறக்க முடிவு
x
தினத்தந்தி 28 Sept 2022 12:30 AM IST (Updated: 28 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி ரவுண்டானாவில் காந்தி சிலை மீண்டும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வருகிற 2-ந்தேதி சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ரவுண்டானாவில் காந்தி சிலை மீண்டும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வருகிற 2-ந்தேதி சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

காந்தி சிலை

பொள்ளாச்சி நகரில் ரூ.34 கோடியே 51 லட்சம் செலவில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகளால் தாமதமாகி வருகிறது. இதற்கிடையில் கடந்த 2021-ம் ஆண்டு சாலை விரிவாக்க பணிக்காக காந்தி சிலை அகற்றப்பட்டது. மேலும் சிலை பத்திரமாக தாலுகா அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் முழுமையாக முடியாததால் காந்தி சிலையை மீண்டும் அமைப்பதில் தாமதமானது. இந்த நிலையில் மீண்டும் காந்தி சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து நகராட்சியில் அனுமதி பெற்று மீண்டும் காந்தி சிலையை அதே இடத்தில் வைப்பதற்கான பணிகள் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து ஏற்கனவே இருந்த பீடம் அமைக்கப்பட்டு, கிரேன் மூலம் காந்தி சிலை பாதுகாப்பாக தூக்கி வந்து வைக்கப்பட்டு உள்ளது.

2-ந்தேதி திறக்க முடிவு

பொள்ளாச்சியில் தமிழிசை சங்கம் சார்பில் கடந்த 1985-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி காந்தி சிலை அமைக்கப்பட்டது. காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்களில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வந்தது. தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலை வைக்கப்பட்டு, துணியால் மூடி வைக்கப்பட்டு உள்ளது. வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் காந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story