கோவையில் போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது


கோவையில் போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் போதை மாத்திரைகளுடன் 2 பேர் கைது

கோயம்புத்தூர்

கோவை

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் குனியமுத்தூர் சதாம் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்துசோதனை செய்தனர்.

அவர்களிடம் மொத்தம் 27 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் பாலக்காடு ரோடு, சதாம் நகரை சேர்ந்த ஜியாவுதீன் (வயது 31) செந்தமிழ் நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி ( 19) என்பது தெரியவந்தது. இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.



Next Story