குமரியில் 26 இடங்களில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
BJP protested at 26 places in Kumari
நாகர்கோவில்:
பால் மற்றும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில் 26 இடங்களில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பால் விலை, மின் கட்டணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பா.ஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே போல குமரி மாவட்டத்தில் 26 இடங்களில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவிலை பொறுத்த வரையில் மீனாட்சிபுரம், வடசேரி, ராமன்புதூர் மற்றும் ஆசாரிபள்ளம் ஆகிய 4 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாநகர தலைவர் ராஜன் தலைமை தாங்கினார்.
பிரசார பிரிவு துணை தலைவர் இசக்கி முத்துபிள்ளை, ஆன்மிக பிரிவு தலைவர் அனுசியா செல்வி, மண்டல பொதுச்செயலாளர் ராஜே ஷ் குமார், கவுன்சிலர் ரோசிட்டாள், மாநகர பார்வையாளர் அஜித்குமார், சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது வைக்கப்பட்டு இருந்த பேனரில் பால் பாக்கெட்டுகளால் ஆன மாலை அணிவிக்கப்பட்டு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோஷங்கள்
இதே போல வடசேரியில் வடக்கு மாநகர தலைவர் வேணுகிருஷ்ணன் தலைமையிலும், ராமன்புதூரில் தெற்கு மாநகர தலைவர் முரளி மனோகர்லால் தலைமையிலும், ஆசாரிபள்ளத்தில் மேற்கு மாநகர தலைவர் சிவசீலன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. உயர்த்தப்பட்ட விலையை குறைக்க வேண்டும் என்று கோஷங்களும் எழுப்பப்பட்டன.
ஆரல்வாய்மொழி
தோவாளை கிழக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் வெள்ளமடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் குமரன்புதூர் மகாதேவன், ஆரல் மாதேவன்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பிரசார பிரிவு செயலாளர் எஸ்.எஸ்.மணி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பார்வையாளர் ஆறுமுகம், இளைஞரணி தலைவர் சந்திரகுமார், பொருளாளர் குகன், ஆரல்வாய்மொழி பா.ஜனதா தலைவர் நரேந்திரகுமார், தாழக்குடி பார்வையாளர் விஜயகுமார், ஒன்றிய விளையாட்டு பிரிவு மண்டல தலைவர் சொர்ணகுமார், பிரசார பிரிவு செயலாளர் லெட்சுமணன், சகாயநகர் தலைவர் பொன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தோவாளை மேற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மேற்கு ஒன்றிய தலைவர் கடுக்கரை மகாதேவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டார். இதில் ஒன்றிய பொதுச்செயலாளர் நீலேஷ் ராம், துணைத் தலைவர் சுந்தர், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அகஸ்தீஸ்வரம்
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் சுயம்பு தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சுபாஷ் முன்னிலை வகித்தார். வர்த்தக பிரிவு ஒன்றிய தலைவர் செல்வ சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு பேசினார். அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் பாரத் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் மருங்கூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு ஒன்றிய தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். பார்வையாளர் சுபாஷ், மயிலாடி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி பாபு, மருங்கூர் பேரூராட்சி துணைத் தலைவி பால ரோகிணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் ஜெகநாதன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மயிலாடி பேரூர் தலைவரும், கவுன்சிலருமான பாபு, பேரூராட்சி கவுன்சிலர்கள் லதா. புனிதா சுதா, ஸ்ரீ கிருஷ்ணன், நீலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் ரத்தினசாமி, குருநாதன், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.