பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது
பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி வடக்கு போலீசார் கழனி வாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி அவர்களை சோதனையிட்டனர். அப்போது அவர்கள் 4 நீண்ட வாள், கத்தி. 2 வீடியோ கேமரா, 2 கண்காணிப்பு கேமராக்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் காரைக்குடியை சேர்ந்த ஆரோக்கிய ரஞ்சித் (வயது 23), திருப்பதி (22), சரத்குமார் (22) என்பதும், கல்லல், காரைக்குடி, சாக்கோட்டை பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
Related Tags :
Next Story