வடமாநில தொழிலாளர்களிடம் கத்தி முனையில் செல்போன்கள் பறித்த 3 பேர் கைது


வடமாநில தொழிலாளர்களிடம் கத்தி முனையில் செல்போன்கள் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2023 7:00 PM GMT (Updated: 2023-01-11T00:31:14+05:30)

கருமத்தம்பட்டி அருகே வடமாநில தொழிலாளர்களிடம் கத்தி முனையில் செல்போன்கள் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி அடுத்த ராமாட்சியம்பாளையம் பகுதியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரேந்திரா என்பவர் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர்.

தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சோமனூர் வழியாக சென்று செந்தேவி பாளையத்தியில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தையும் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் (வயது 23), விருதுநகரை சேர்ந்த தமிழ்வாணன் (32) மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த குணசேகர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story