நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த 2 பேர் கைது


நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2022 12:39 AM IST (Updated: 16 Nov 2022 12:53 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அடிதடி வழக்கில் கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு சூரங்குடியை சேர்ந்த செல்வராஜ் (வயது 54), நாகர்கோவிலை சேர்ந்த கோபிநாத் (53) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்களுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இதனையடுத்து 2 பேரையும் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் நாங்குநேரி போலீசார் செல்வராஜ், கோபிநாத் ஆகியோரை கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.


Next Story