31 இடங்களில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்


31 இடங்களில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:35 AM IST (Updated: 16 Nov 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று 31 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று 31 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், இவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு தச்சநல்லூர் நகர் தெற்கு மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பகுதி தலைவர் மேகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் இளைஞர் அணி பொதுச்செயலாளர் நவீன் போஸ், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துபலவேசம், மகளிர் அணி அமுதவல்லி, நெசவாளர் அணி முருகப்பா, மலையரசன், தகவல் தொழில்நுட்ப அணி பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தச்சநல்லூர், வண்ணார்பேட்டை உள்பட மாவட்டத்தில் மொத்தம் 31 இடங்களில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திசையன்விளை

திசையன்விளை நகர பா.ஜனதா சார்பில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி, பேரூராட்சி கவுன்சிலர் லிவ்யா சக்திவேல், மகளிரணி தலைவர் ஷாலினி கமலேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராககலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

உவரி அருகே நவ்வலடியில் ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராதாபுரம் வடக்கு ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் நரேந்திரபாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பை

அம்பை நகர பா.ஜனதா கட்சி சார்பில், அம்பை பாரத ஸ்டேட் வங்கி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். அம்பை நகர பொதுச்செயலாளர்கள் சுகுமாரன், சுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத்தலைவரும், அம்பை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான ராமராஜ் பாண்டியன் கலந்து கொண்டார்.

அரசாங்க பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சையது சுலைமான், ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் பால் பாண்டியன், வஜ்ரசேனா, சுவாசம் அறக்கட்டளை ரமேஷ், அம்பை நகர துணைத்தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story