மது, கள் விற்ற 5 பேர் கைது


மது, கள் விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 May 2023 7:30 AM IST (Updated: 22 May 2023 7:30 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு, நெகமம் பகுதிகளில் மது, கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிங்கையன்புதூர் பகுதியில் மதுவிற்பனை செய்த சென்னை அம்பத்தூர் வெங்கடபுரத்தை சேர்ந்த கணேசன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல முள்ளுப்பாடியில் டாஸ்மாக் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஓரியூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (33), கோவில்பாளையம் டாஸ்மாக் கடை அருகே மதுவிற்பனை செய்ததாக சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த பாண்டி (27) ஆகியோரை போலீசார் கைது செய்து செய்தனர்.

இதேபோல நெகமத்தை அடுத்த செங்குட்டைப்பாளையத்தில் கள் இறக்கி விற்பனை செய்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த திருமூர்த்தி (42), செட்டியக்காபாளையத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வீரன் (75) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story