தேசிய நெடுஞ்சாலையில் ரூ.80 கோடியில் கண்காணிப்பு கேமரா


தேசிய நெடுஞ்சாலையில் ரூ.80 கோடியில் கண்காணிப்பு கேமரா
x
தினத்தந்தி 16 Nov 2022 1:21 AM IST (Updated: 16 Nov 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

மதுரை-கன்னியாகுமரி இடையே நான்கு வழிச்சாலையில் ரூ.80 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் இதற்கான கட்டுப்பாட்டு வரை எட்டூர் வட்டம் சோதனை சாவடியில் திறக்கப்பட்டது.

விருதுநகர்


மதுரை-கன்னியாகுமரி இடையே நான்கு வழிச்சாலையில் ரூ.80 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் இதற்கான கட்டுப்பாட்டு வரை எட்டூர் வட்டம் சோதனை சாவடியில் திறக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமரா

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும், சாலைப்புதூரிலிருந்து நாகர்கோவில் வரையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை ரூ.80 கோடி மதிப்பில் 514 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5 கிலோ மீட்டர் இடைவெளியில் 210 இடங்களில் வேக கட்டுப்பாட்டு மீட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை துல்லியமாக கண்காணிக்க வாய்ப்பு ஏற்படும்.

எச்சரிக்கும் நிலை

அதிலும் விபத்துகளில் சிக்கி நிற்காமல் செல்லும் வாகனங்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு தப்பி செல்லும் வாகனங்கள் ஆகியவற்றை எளிதில் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். மேலும் வேகக்கட்டுப்பாட்டு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதால் அதிவேகமாக செல்லும் வாகனங்களையும் கண்டறிந்து விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. மேலும் ஒரே திசையில் வாகனங்கள் சென்றால் சிவப்பு, மஞ்சள் வர்ணங்களில் அவைகளை எச்சரிக்கும் நிலையும் ஏற்படும்.

இந்த கேமராக்களின் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை விருதுநகர் சாத்தூர் இடையே எட்டூர் வட்டம் சோதனை சாவடியில் திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் இந்த கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். மேலும் இதன் மூலம் நான்கு வழிச்சாலையில் வாகன விபத்துகளை தவிர்க்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அதிகாரி வைபவ் மிட்டல் மற்றும் நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story