இயற்கை சீற்றத்தால் விபத்தில் சிக்கும் மீனவர்களின் நலனுக்காக ரூ.1 கோடி சுழல் நிதி -தமிழக அரசு அறிவிப்பு


இயற்கை சீற்றத்தால் விபத்தில் சிக்கும் மீனவர்களின் நலனுக்காக ரூ.1 கோடி சுழல் நிதி -தமிழக அரசு அறிவிப்பு
x

இயற்கை சீற்றத்தால் விபத்தில் சிக்கும் மீனவர்களின் நலனுக்காக ரூ.1 கோடி சுழல்நிதி உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் எந்த வருமானமும் இன்றி வறுமைக்கோட்டிற்கு கீழ் செல்லும் நிலையில் உள்ளதால், மீனவர் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு மீனவர்களின் துயர் துடைக்க சுழல் நிதியினை உருவாக்கி உள்ளது.

ரூ.1 கோடி சுழல் நிதி

இந்த நிதியில் இருந்து காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கும் பட்சத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார ரீதியாக மேம்படுத்திக்கொள்ள பேருதவியாக அமையும் என்பதால் 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை நிலுவையாக உள்ள 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் நிவாரணம் வழங்கிட ரூ.50 லட்சமும், இனிவரும் காலங்களில் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்காக ரூ.50 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடி சுழல் நிதி உருவாக்கி ஆணை வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story