காட்டுப்புத்தூர் அருகே ரூ.1¼ கோடியில் சாலை அமைக்கும் பணி
காட்டுப்புத்தூர் அருகே ரூ.1¼ கோடியில் சாலை அமைக்கும் பணி நநடைபெற்றது.
காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தப்பட்டி முதல் வளையப்பட்டி ரோடு கருக்கமடை காக்காவாரி ரோடு வரை முதல்-அமைச்சரின் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.ஒரு கோடியே 36 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தொட்டியம் ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி, துணை தலைவர் பாபு என்ற சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானமணி, சரவணகுமார், ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய அங்கன்வாடி கட்டிடத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழிராமச்சந்திரன், துணைத் தலைவர் குப்புசாமி மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கர்கணேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சேர்வைக்காரன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் 2 புதிய வகுப்புகட்டிடத்தை எம்.எல்.ஏ திறந்து வைத்தார். இதில் எம். களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.தண்டபாணி, வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன், பள்ளி தலைமை ஆசிரியர் மனுநீதி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.