80 வழக்குகளில் சமரசம் மூலம் ரூ.1½ கோடி தீர்வு


80 வழக்குகளில் சமரசம் மூலம் ரூ.1½ கோடி தீர்வு
x
தினத்தந்தி 11 March 2023 6:45 PM GMT (Updated: 11 March 2023 6:46 PM GMT)

ராமநாதபுரத்தில் லோக் அதாலத் நிகழ்வில் 80 வழக்குகளில் சமரசம் மூலம் ரூ.1½ கோடி தீர்வு காணப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் கதிரவன் வரவேற்று பேசினார். முதன்மை குற்றவியல் நீதிபதி கவிதா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பரணிதரன், மகளிர் விரைவு விசாரணை நீதிபதி கோபிநாத், நிதித்துறை நடுவர் எண்.2 பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் 8 அமர்வுகளாக நடைபெற்ற இந்த லோக் அதாலத் நிகழ்வில் மொத்தம் 143 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 80 வழக்குகளில் சமரச தீர்வு மூலம் முடிவு காணப்பட்டு தீர்வுத்தொகையாக ரூ.1 கோடியே 55 லட்சத்து 97 ஆயிரத்து 479 மதிப்பில் தீர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் வக்கீல் சங்க செயலாளர் பிரபாகரன் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். முடிவில், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி விர்ஜின்வெஸ்டா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story