இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம்

போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
அரியலூர்
போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்கவும், மதுவை ஒழிக்கவும் அரியலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் அருண்பாண்டியன் முன்னிலையில் 1 கோடி கையெழுத்துகளை பெற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு கொடுக்க ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். பஸ் நிலையத்திற்கு வந்த ஏராளமான பொதுமக்கள், பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கையெழுத்து போட்டனர்.
Related Tags :
Next Story






