ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்
ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினாா்.
சிறுபாக்கம் அடுத்த மங்களூர் ஊராட்சியில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மங்களூர் ஊராட்சி தலைவர் ராமு தலைமை தாங்கினார். கலெக்டர் அருண் தம்புராஜ், மங்களூர் ஒன்றியக்குழு தலைவர் சுகுணா சங்கர், சப்-கலெக்டர் லூர்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேப்பூர் தாசில்தார் ஜெயந்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு 244 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 63 ஆயிரத்து 72 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து 3 ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் வாகனங்களை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் அட்மா குழு தலைவர் செங்குட்டுவன், மங்களூர் ஒன்றியக்குழு துணை தலைவர் கலைச்செல்வி செல்வராசு, வேளாண் உதவி இயக்குனர்கள் அருள்தாசன், மாதவன், வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன், வட்டர வளர்ச்சி அலுவலர்கள் வீராங்கன், வீரமணி, ஊராட்சி தலைவர்கள் கவிதா, தமிழரசி, தேவராஜ், மஞ்சுளா, மஞ்சாயி உள்பட பலர் கலந்து கொண்டனர்.