மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்


மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்
x

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட நாவலூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. முகாமில் கலெக்டர் கற்பகம் 301 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.1 கோடியே 80 லட்சத்து 60 ஆயிரத்து 696 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் வழங்கினார். மேலும் முகாமில் பெறப்பட்ட 86 மனுக்களில், 69 மனுக்கள் தீர்வு காணப்பட்டு, மீதமுள்ள 17 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. முகாமில் கலெக்டர் கற்பகம் பேசுகையில், குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். உங்கள் பகுதியில் குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தாலோ, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்தாலோ புகார் தெரிவிக்கலாம். உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளது, என்றார். இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story