234 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவி
நெமிலியில் 234 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
நெமிலி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நெமிலி தாசில்தார் பாலசந்தர் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்தன் வரவேற்புரை வழங்கினார். விழாவில் சப்- கலெக்டர் பாத்திமா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
விழாவில் இலவச வீட்டுமனை பட்டா, மற்றும் பட்டா மாற்றம், உதவித்தொகை, குடும்ப அட்டை, இருளர் இன சான்று, கறவை மாடு பராமரிப்பு மற்றும் விவசாய கடன் என 234 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
துணை தாசில்தார்கள் பாஸ்கரன், பன்னீர்செல்வம், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேல், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெருமாள், வேளாண்மை துறை அலுவலர் அருணாகுமாரி, விவசாய சங்க நிர்வாகிகள் சுபாஷ், கிருஷ்ணன் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.