63 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்


63 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்
x

63 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த சுதந்திர தினவிழாவில் 63 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

சுதந்திர தின விழா

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் மூவர்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் கலெக்டர் பறக்க விட்டார். அதனைத்தொடர்ந்து தியாகிகளை கவுரவித்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு கதர் ஆடை அணிவித்து கவுரவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.44 ஆயிரத்து 640 மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் மாவட்ட சமூக நல பாதுகாப்பு துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.66 லட்சத்து 57 ஆயிரத்து 324 மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலும், தாட்கோ சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.29 லட்தச்து 50 ஆயிரம் மதிப்பில் என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 ஆயிரத்து 964 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பாராட்டு சான்றிதழ்

தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 112 அரசு அலுவலர்களுக்கு மற்றும் பல்வேறு திட்ட பணிகளில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பேருதவி புரிந்த 25 பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன. விழாவில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன், டி.ஐ.ஜி. கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story