ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்


ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்
x

அனக்காவூர் ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு தொகுதி அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திக்குளம் கிராமத்தில் ரூ.7.49 லட்சத்தில் புதிய ரேஷன் கட்டிடம், வடசேந்தமங்கலம் கிராமத்தில் ரூ.28 லட்சத்தில் புதிய ஆரம்ப பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

அத்தி கிராமத்தில் ரூ.17.32 லட்சத்தில் பள்ளிக் கட்டிடம், ரூ.2 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, ரூ.23.45 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.10 லட்சத்தில் நாடக மேடை, காரணை கிராமத்தில் ரூ.7.49 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம், ரூ.12.61 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் என மொத்தம் சுமார் ரூ.1 கோடியே 8 லட்சத்தில் கட்டிடங்கள் கட்டடப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்களை கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அந்தந்த கிராமங்களில் நடைபெற்றது.

அனக்காவூர் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி, குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்று புதிய கட்டிடங்களை திறந்து வைத்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி பேசினார்.

விழாவில் மாவட்ட கவுன்சிலர்கள் ஆக்கூர் முருகேசன், ஏ.பி.சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மனோகரன், மகாலட்சுமி, ராஜீவ்காந்தி, கனிமொழி மோகன், நகராட்சி கவுன்சிலர் சவுந்தர்பாண்டியன், வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சல்சா, தலைமை ஆசிரியர் செந்தில்ராஜா, அனக்காவூர் ஒன்றிய செயலாளர்கள் திராவிடமுருகன், சி.கே.ரவிக்குமார், தி.மு.க. நிர்வாகி புரிசை எஸ்.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story