நகை பட்டறையில் 1 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு


நகை பட்டறையில் 1 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை நகைப்பட்டறையில் ஒரு கிலோ தங்க கட்டிகளை திருடி சென்ற சென்ற வடமாநில வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்


கோவை நகைப்பட்டறையில் ஒரு கிலோ தங்க கட்டிகளை திருடி சென்ற சென்ற வடமாநில வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தங்க நகை பட்டறை

கோவை வெரைட்டிஹால் ரோடு சண்முகா நகரை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது45). இவர் ம.ந.க. வீதியில் தங்க நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இங்கு வடமாநில தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து வருகின்றனர். கடந்த 18-தேதி மோகன்குமார் தங்க நகைப் பட்டறையை பூட்டி சாவியை பக்கத்து அறையில் வசித்த தனது பட்டறை தொழிலாளியான நோவா என்பவரிடம் கொடுத்து உள்ளார்.

சிறிது நேரத்தில் மோகன்குமாரிடம் வேலை பார்க்கும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரமோத் விட்டல் போஸ்லே (21) என்பவர் தங்க கட்டிகளை நகையாக மாற்ற வேண்டும் எனக்கூறி நோவாவிடம் கடை சாவியை வாங்கி உள்ளார்.

ஒரு கிலோ தங்கம் திருட்டு

இதையடுத்து அவர் பட்டறையை திறந்து சிறிது நேரம் வேலை பார்த்து உள்ளார். அதன்பிறகு அவரை காணவில்லை. பட்டறை திறந்து கிடந்தது. இதற்கிடையே நோவா பட்டறைக்கு சென்று பார்த்த போது பொருட்கள் கலைந்து கிடந்தன. பிரமோத் விட்டல் போஸ்லேவை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கடையில் சோதனையிட்டேபாது 1,067 கிராம் (1கிலோ) தங்க கட்டிகளை காணவில்லை. அதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் ஆகும். அந்த தங்க கட்டிகளை பிரமோத் விட்டல் போஸ்லே திருடி விட்டு சொந்த ஊருக்கு தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவருடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.

பரபரப்பு

இந்த நிலையில் அவரை பிடிக்க போலீசார் மாராட்டிய மாநிலம் சென்று உள்ளனர். 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் தீபா வளி பண்டிகையையொட்டி நகை செய்ய வேண்டும் என்று கூறி பிரமோத் விட்டல் போஸ்லே பட்டறையின் சாவியை வாங்கி சென்று தங்கக்கட்டிகளை திருடிக் கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பிரமோத் விட்டல் போஸ்லே நகைப்பட்டறைக்குள் நுழையும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நகைப்பட்டறை தொழிலாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story