1 கிலோ கஞ்சா பறிமுதல்


1 கிலோ கஞ்சா பறிமுதல்
x

1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அறந்தாங்கி அருகே சிலட்டூர் பகுதியில் ஒரு வீட்டின் அருகே கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பாண்டித்துரை (வயது 29), சேதுபதி (25) ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சேதுபதியை போலீசார் கைது செய்தனர். மேலும் பாண்டித்துரை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.


Next Story