சூறாவளி காற்றுக்கு 1¾ லட்சம் வாழைகள் சேதம்


சூறாவளி காற்றுக்கு 1¾ லட்சம் வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் சூறாவளி காற்றுக்கு 1¾ லட்சம் வாழைகள் சேதம் அடைந்தன. அதற்கு நிவாரணம் கிடைக்காத தால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் சூறாவளி காற்றுக்கு 1¾ லட்சம் வாழைகள் சேதம் அடைந்தன. அதற்கு நிவாரணம் கிடைக்காத தால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

வாழை சாகுபடி

பொள்ளாச்சியை அடுத்த சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஜல்லிப்பட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், தாளக்கரை, கரையாம்பாளை யம், செஞ்சேரி, கள்ளப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சுல்தான்பேட்ைட பகுதியில் கடந்த மாதம் 23-ந் தேதி மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது.

இதில், அங்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழைகள் முறிந்து சேதம் அடைந்தன.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

அதிகாரிகள் கணக்கெடுப்பு

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளித்தனர். இதையடுத்து சேதமடைந்த வாழை தோட்டங்களுக்கு வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிப்பு விவரங்களை கணக்கெடுத்தனர்.

மேலும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரும் வாழை கள் சேதமடைந்த சில இடங்களை பார்வையிட்டார்.

அப்போது அவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் விவ சாயிகளுக்கு இன்னும் உரிய நிவாரணம் வழங்கப்பட வில்லை என்று தெரிகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பல லட்சம் இழப்பு

சுல்தான்பேட்டை சுற்று வட்டாரத்தில் வாழை சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது.

கடந்த மாதம் சூறாவளி காற்று டன் பெய்த கனமழைக்கு தாங்காமல் சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடு சரிந்து விட்டன.

இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு உள்ளது.

அறுவடைக்கு ஒருசில மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில் வாழை மரங்களை சாய்ந்து விட்டன.

இதனால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. முறிந்து விழுந்த வாழை மரங் களை அப்புறப்படுத்த ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகும்.

எனவே சேதமடைந்த ஒரு வாழைக்கு ரூ.200 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதம் ஆகியும் இன் னும் இழப்பீடு வழங்க வில்லை. இதனால் நாங்கள் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story