ரூ.1½ லட்சம் மோசடி


ரூ.1½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 5 July 2023 1:00 AM IST (Updated: 5 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்த போடியை சேர்ந்த 2 பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி

போடி ஜீவா நகரை சேர்ந்தவர்கள் சுமங்கலி பிரியா, சித்திரலேகா. இவர்கள் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குமரவேல் (வயது 30) என்பவர் போடிக்கு வந்தார். அங்கு சுமங்கலி பிரியா, சித்திரலேகா ஆகியோரை சந்தித்தார். அவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனை நம்பி குமரவேல் வங்கி மூலம் சுமங்கலி பிரியாவுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் குமரவேலுக்கு வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகர் போலீஸ்நிலையத்தில் குமரவேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் சுமங்கலி பிரியா, சித்திரலேகா ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story