3 கிராம் தங்கக்காசு கொடுத்து பெண்ணிடம் 1 லட்சம் மோசடி


3 கிராம் தங்கக்காசு கொடுத்து பெண்ணிடம் 1 லட்சம் மோசடி
x

புதையலில் கிடைத்த 2 கிலோ தங்கக்காசுகளை தருவதாக கூறி 3 கிராம் தங்கக்காசு கொடுத்து பெண்ணிடம் 1 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கோயம்புத்தூர்

கோவை

புதையலில் கிடைத்த 2 கிலோ தங்கக்காசுகளை தருவதாக கூறி 3 கிராம் தங்கக்காசு கொடுத்து பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

தங்கக்காசு புதையல்

கோவை பழையூர் சித்தா நாயுடு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி இந்திராணி (வயது 28). இவர்கள் பாப்ப நாயக்கன்பாளையத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடையில் இந்திராணி மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு பெண் மற்றும் 2 வாலிபர்கள், இந்திராணியிடம் நாங்கள் வீடு கட்ட குழி தோண்டிய போது 2 கிலோ தங்க காசுகள் புதையலாக கிடைத்தன. அதை பணமாக மாற்ற எங்களுக்கு தெரியவில்லை.

மேலும் தங்கக்காசுகள் இருப்பது வெளியே தெரிந்தால் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாங்கி சென்று விடுவார்கள்.

பரிசோதித்து பார்த்தார்

நாங்கள் தற்போது வீடு கட்டி வருவதால் பணம் தேவைப்படுகி றது. எனவே உங்களுக்கு ரூ.3 லட்சத்துக்கு 2 கிலோ தங்கக்காசு களை தருவதாக கூறி உள்ளனர்.

அதற்கு அவர் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி உள்ளார். ஆனாலும் அவர்கள் புதையலில் கிடைத்ததாக கூறி இந்திராணியிடம் தலா ஒரு கிராம் கொண்ட 3 தங்க காசுகளை கொடுத்தனர்.

2 வாரம் கழித்து வந்து நாங்கள் 2 கிலோ தங்க காசுகளை கொண்டு வருகிறோம். அதற்குள் நீங்கள் பணத்தை தயார் செய்து வைத்து விடுங்கள் என்று கூறி விட்டு சென்றனர்.

அந்த தங்க காசுகளை இந்திராணி பரிசோதித்தபோது அவை உண்மையான தங்கக்காசுகள் தான் என்பது தெரியவந்தது.

ரூ.1 லட்சம்

இந்த நிலையில் 2 வாரம் கழித்து அந்த 3 பேரும் வந்து இந்திராணியி டம் பணம் தயாராகி விட்டதா? என்று கேட்டனர். அதற்கு இந்திராணி தன்னிடம் ரூ.3 லட்சம் இல்லை. ரூ.1 லட்சம் மட்டும் தயார் செய்ய வைத்து இருப்பதாக கூறியுள்ளார்.

அதற்கு அவர்கள், இந்திராணியிடம் ரூ.1 லட்சத்தை வாங்கிக் கொண்டு, தங்கக்காசு என்று கூறி 2 கிலோ போலி காசுகளை கொடுத்தனர். மீதி பணத்தை ஒரு மாதம் கழித்து வந்து வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளனர்.

அந்த தங்க காசுகளை இந்திராணி, தனது கணவருடன் சென்று பரிசோதனை செய்த போது அவை போலியானதும், அலுமினிய நாணயத்தின் மீது தங்க முலாம் பூசியது இருந்ததும் தெரிய வந்தது.

3 பேருக்கு வலைவீச்சு

இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்கா ணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் தலைமறைவான 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story