கருமந்துறை பகுதியில்ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த சரக்கு வேன் பறிமுதல்
கருமந்துறை பகுதியில் ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தி வந்த சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்
பெத்தநாயக்கன்பாளையம்,
கருமந்துறை பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சரக்கு வேனை ஓட்டிவந்த டிரைவர், போலீசாரை கண்டதும் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதையடுத்து அந்த சரக்கு வேனில் போலீசார் சோதனையிட்ட போது, அதில் புதுச்சேரியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 324 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபாட்டில்கள் மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவர் மற்றும் அந்த வேனின் உரிமையாளர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், அந்த சரக்கு வேன் கருமந்துறை குன்னூர் பகுதியை சேர்ந்தவருடையது என தெரியவந்துள்ளது. இதையடுத்து தப்பிஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story