ரூ.1 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


ரூ.1 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் மதன்குமார் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் இணைந்து விழுப்புரம்- திருச்சி சாலை மற்றும் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்விற்பனையில் ஈடுபட்ட மொத்த வியாபார அங்காடியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அக்கடைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதோடு தொடர் விற்பனையில் ஈடுபட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையாக கடையை பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

1 More update

Next Story